ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சைநடத்துகின்றன.
அதன்படி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
மேலும் இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்.