ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 56ஆவது லீக் ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
இரு அணிகலும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.