ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: மன்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.