ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.
லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கே), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல்(கே), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னாய்.