16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
இந்த சூழலில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற உள்ள, 58ஆவது லீக் போட்டியில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், குர்னால் பாண்டியா(கே), பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் சரக், அவேஷ் கான்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி.