ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
![IPL 2024: Another Comprehensive Victory for Lucknow Super Giants! ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!](https://img.cricketnmore.com/uploads/2024/04/LSG-beat-rcb-lg.jpg)
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement