17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக சுமித் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் டேவிட் மில்லர், விருத்திமான் சஹா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில்(கே), விருத்திமான் சஹா, சாய் சுதர்ஷன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், மோஹித் சர்மா, நூர் அஹ்மது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்
டெல்லி கேபிடல்ஸ்: ப்ரித்வி ஷா, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), அக்ஸர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.