
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது.
இதையடுத்து தொடங்கிய போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், ஷரத் ஆகியோர் நீக்கப்பட்ட மேத்யூ வேட், அபினவ் மனோகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணியில் நந்த்ரே பர்கருக்கு பதிலாக குல்தீப் சென் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. அதேசமயம் தொடரை வெற்றியுடன் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து குஜராத் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில்(கே), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோஹித் சர்மா