விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷாய் ஹோப் மற்றும் சுமித் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவியதால், இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில்(கே), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோஹித் சர்மா, சந்தீப் வாரியர்.