ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
அதன்படி ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான லக்னோ அணியை…
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
அதன்படி ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான லக்னோ அணியை நிக்கோலஸ் பூரன் வழிநடத்துகிறார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, நிக்கோலஸ் பூரன்(கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கே), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.