
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கே), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில்(கே), பிஆர் ஷரத், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா