இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஷ் சாவ்லா, நெஹல் வதேரா, நுவான் துஷாரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், நேஹால் வதேரா, முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா.