ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சண்டிகரில் நடைபெறும் இப்ப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் விளையாடவில்லை. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ்…
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சண்டிகரில் நடைபெறும் இப்ப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் விளையாடவில்லை. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஸ்பென்சர் ஜான்சன் நீக்கப்பட்டு, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே குஜராத் அணி இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸுடன் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில்(கே), டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அஹ்மது, சந்தீப் வாரியர், மோஹித் சர்மா
பஞ்சாப் கிங்ஸ்: சாம் கரன் (கே), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.