
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.
சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, சாம் கரன், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ரஸா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.