ஐபிஎல் 2024: டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்…
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், சந்தீப் சர்மா, அவேஷ் கான், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கே), குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்