ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பெங்களூரு அணி முதல் போட்டியில் தோல்வியையும், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். மேலும் ஆர்சிபி அணி நடப்பு சீசனில் தங்கள் சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடவுள்ளதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கே), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்..