
நேற்று தொடங்கிய ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா, டெவான் கான்வே ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண ராஜு.
இம்பேக்ட் வீரர்கள் - விக்னேஷ் புதூர், அஸ்வனி குமார், ராஜ் பாபா, கார்பின் போஷ், கர்ண் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திர, தீபக் ஹூடா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், எம்எஸ் தோனி(கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
இம்பேக்ட் வீரர்கள் - ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷீத்