
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல், நடராஜன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்.
இம்பேக்ட் வீரர்கள் - மணிமாறன் சித்தார்த், அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஆகாஷ் சிங், ராஸ் ஹங்கர்கேகர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார்.
இம்பேக்ட் வீரர்கள் - கருண் நாயர், அசுதோஷ் சர்மா, டோனோவன் ஃபெரீரா, திரிபுரானா விஜய், தர்ஷன் நல்கண்டே