
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேசமயம் காயம் காரணமாக முந்தைய போட்டியை தவறவிட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் மீண்டும் டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
இம்பாக்ட் வீரர்கள்: சுயாஷ் சர்மா, ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல்(கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
இம்பாக்ட் வீரர்கள்: அபிஷேக் போரல், தர்ஷன் நல்கண்டே, கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா