
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கேகேஆர் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணியில் மொயீன் அலி, ரமந்தீப் சிங் ஆஅகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ராஜஸ்தான் அணியில் வநிந்து ஹசரங்கா, குர்னால் ரத்தோர் மற்றும் யுத்வீர் சிங் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக்(கேப்டன்), குணால் சிங் ரத்தோர், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால்
இம்பாக்ட் வீரர்கள்: குமார் கார்த்திகேயா, ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, குவேனா மபாகா, அசோக் ஷர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா
இம்பேக்ட் வீரர்கள்: மணீஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா