
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான கொல்கத்தா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், லாக்னோ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிக்கு பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளகின்றன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே(கேப்டம்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, அனுகுல் ராய், ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பேக்ட் சப்ஸ்: ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அஹமத், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்.