
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கேகேஅர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணியில் ஸ்பென்சர் ஜான்சன் நீக்கப்பட்டு, மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சிஎஸ்கே தரப்பில் ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேட்ச்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் வீரர்கள்: ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனிஷ் பாண்டே, ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, எம்எஸ் தோனி(கேட்ச்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
இம்பேக்ட் வீரர்கள்: மதீஷா பத்திரனா, ஜேமி ஓவர்டன், தீபக் ஹூடா, ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோடி