
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூபப்ர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஹிம்மத் சிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் குல்வந்திற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(கே), ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
இம்பேக்ட் வீரர்கள் - ஆயுஷ் படோனி, பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது, மேத்யூ பிரீட்ஸ்கி, ஷமர் ஜோசப்
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேட்ச்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்
இம்பேக்ட் வீரர்கள் - பிரஷித் கிருஷ்ணா, மஹிபால் லோம்ரோர், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், ஜெயந்த் யாதவ்