
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோருக்கு பதிலாக கரண் சர்மா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன்(w), ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேட்ச்), நமன் திர், கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், கர்ன் சர்மா
இம்பாக்ட் வீரர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு, ராபின் மின்ஸ், ரீஸ் டாப்லி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட்(கேப்டன்), அப்துல் சமத், ஆயுஷ் படோனி, திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்
இம்பாக்ட் வீரர்கள்: டேவிட் மில்லர், ஷாபாஸ் அகமது, ஹிம்மத் சிங், யுவராஜ் சவுத்ரி, ஆகாஷ் மகாராஜ் சிங்.