
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேசமயம் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விக்னேஷ் புதூர் இன்றைய ஆட்டத்தில் விளையாடாதது குறிப்பிடத்தக்கய். மேலும் இரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இம்பேக்ட் வீரர்கள் - மஹிபால் லோமரர், கிளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹர், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு.
இம்பேக்ட் வீரர்கள் - ராபின் மின்ஸ், அஸ்வனி குமார், ராஜ் பாவா, கார்பின் போஷ், வில் ஜாக்ஸ்