
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்ததுகின்றன. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், அவேஷ் கான்
இம்பாக்ட் சப்ஸ்: திலக் வர்மா, கார்பின் போஷ், ராபின் மின்ஸ், சத்யநாராயண ராஜு, கர்ண் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் சாஹர், விக்னேஷ் புதூர்.
இம்பாக்ட் சப்ஸ்: ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது, எம் சித்தார்த், ஆகாஷ் சிங்.