
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதில் இரு அணிகளும் தோல்விகு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லோக்கி ஃபெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்கள்: சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, அஸ்மத்துல்லா ஓமர்சாய், வைஷாக் விஜய்குமார்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
இம்பேக்ட் வீரர்கள்: சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அன்ஷுல் கம்போஜ்