
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கமிந்து மெண்டிஸுக்கு பதிலாக ஈஷான் மலிங்கா லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹல் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சஹால்.
இம்பேக்ட் வீரர்கள் - சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, வஷாக் விஜய்குமார், ஹர்பிரீத் ப்ரார்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(w), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ்(c), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, ஈஷான் மலிங்கா
இம்பேக்ட் வீரர்கள் - அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர், ஜெய்தேவ் உனத்கட்