
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்க்கு பதிலாக லோக்கி ஃபெர்குசன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. இரு அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
இம்பேக்ட் வீரர்கள் - பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அகமது, ஹிம்மத் சிங், ஆகாஷ் மகாராஜ் சிங்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் வீரர்கள் - பிரவீன் துபே, விஜய்குமார் வைஷாக், நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்பிரீத் ப்ரார்