
ஐபிஎல் தொடரில் இன்ரு நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான் பஞ்சாப் அணியில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், ராஜஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் லெவன்: பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இம்பேக்ட் பிளேயர்கள் - பிரியான்ஷ் ஆர்யா, ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத் வைஷாக் விஜய்குமார்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், சந்தீப் சர்மா.
இம்பேக்ட் பிளேயர்கள் - குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்