
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது.
பின்னர் மழை நின்றிருந்தாலும், இப்போட்டியானது 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லிற்கு பதிலாக ஸ்டொய்னிஸ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, நேஹால் வதேரா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இம்பேக்ட் வீரர்கள் - பிரப்சிம்ரன் சிங், விஜய்குமார் வைஷாக், சூர்யன்ஷ் ஷெட்ஜ், கிளென் மேக்ஸ்வெல், பிரவீன் துபே
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, யாஷ் தயாள்
இம்பேக்ட் வீரர்கள் - தேவ்தத் படிக்கல், ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தகே, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்