
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
இம்பேக்ட் வீரர்கள் - சஞ்சு சாம்சன், குணால் சிங் ரத்தோர், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, க்வேனா மபாகா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
இம்பேக்ட் வீரர்கள்: சச்சின் பேபி, ஜெய்தேவ் உனத்கட், ஜீஷான் அன்சாரி, ஆடம் ஜம்பா, வியான் முல்டர்