
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் பில் சால்டிற்கு பதிலாக ஜேக்கப் பெத்தெல் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் டெல்லி அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் மீண்டும் லெவனிற்கு திரும்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
இம்பேக்ட் வீரர்கள்: அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், மாதவ் திவாரி, திரிபுரானா விஜய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடும் லெவன்: விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தேஜ், ஸ்வப்னில் சிங்