
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ராஜத் படிதர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணியும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவுள்ளனர். இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பிளேயிங் லெவன்: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குர்ணால் பாண்டியா, ராசிக் தர் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அஜிங்கியா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.