
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ராஜஸ்தான் அணியில் வநிந்து ஹசரங்கா மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
இம்பாக்ட் வீரர்கள்: ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
இம்பாக்ட் வீரர்கள்: தேவ்தத் பாடிக்கல், ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்