
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் தொடங்கி சில தினங்களே ஆன நிலையில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், வநிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா
இம்பேக்ட் பிளேயர்ஸ் - குணால் சிங் ரத்தோர், சுபம் துபே, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குவேனா மஃபாகா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அஜிங்கியா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் பிளேயர்ஸ் - அன்ரிச் நார்ட்ஜே, மனிஷ் பாண்டே, அங்கரிஷ் ரகுவன்ஷி, அமித் ராய், லவ்னீத் சிசோடியா.