
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஈடன் கார்ட்னஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் நீக்கப்பட்டு ரஹ்மனுல்லா குர்பாஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் கேகேஆர் அணி தோல்விக்கு பிறகும், குஜராத் அணி வெற்றிக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் டெவாடியா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
இம்பாக்ட் வீரர்கள்: இஷாந்த் சர்மா, மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், கரீம் ஜனத், அர்ஷத் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
இம்பாக்ட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய்