ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது நடைபெற்று முடிந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில் இலங்கையில் மஹீஸ் தீக்ஷனாவை சென்னை அணி ரூ.70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
1) கைஸ் அகமது - ஏலம் எடுக்கப்படவில்லை
2) பியூஷ் சாவ்லா - ஏலம் எடுக்கப்படவில்லை
3) மயங்க் மார்கண்டே - மும்பை இந்தியன்ஸ், 65 லட்சம் ரூபாய்
4) ஷாபாஸ் நதீம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 50 லட்சம் ரூபாய்
5) தப்ரைஸ் ஷம்சி - ஏலம் எடுக்கப்படவில்லை
6) இஷ் சோதி - ஏலம் எடுக்கப்படவில்லை
7) மகேஷ் தீக்ஷனா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 70 லட்சம் ரூபாய்
8) கர்ண் ஷர்மா - ஏலம் எடுக்கப்படவில்லை