17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது வரும் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 22ஆம் தேதி மாலை ஐபிஎல் 2024ஆம் ஆண்டின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடக்கும் தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதேபோல் ஹிந்தி பாடகர் சோனு நிகாம், ஹிந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெரீஃப் ஆகியோரது நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரலையில் காணலாம். அதேசமயம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது 7.30 மணிக்கு தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.