அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று தொடங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் 23ஆஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
அதன்படி இன்று நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிக், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுக வீரர்களுக்கான தொப்பியைப் பெற்றனர்.
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா(கே), ரவி பிஷ்னோய்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.