அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது..
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், கிரேக் யங், ஜோசுவா லிட்டில், கோனார் ஓல்பர்ட்.