அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி - ஹைலைட்ஸ்
அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
டப்லினில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி 77 ரன்கள் எடுத்தார்.
கடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்களும் பால் ஸ்டிர்லிங் 40 ரன்களும் டெக்டர் 39 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தீபக் ஹூடா தேர்வானார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News