அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலா இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா(கே), ரவி பிஷ்னோய்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.