ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது.
நியூசிலாந்து: சாத் பௌஸ், டிம் செய்ஃபெர்ட், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மார்க் சாப்மேன், வில் யங், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதீ(கே), கைல் ஜேமிசன், ஆதித்யா அசோக், பென் லிஸ்டர்.
ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம்(கே), ஆர்யன்ஷ் சர்மா, விரித்யா அரவிந்த், ஆசிஃப் கான், அன்ஷ் டாண்டன், பாசில் ஹமீத், அயன் அஃப்சல் கான், முகமது ஃபராசுதீன், முஹம்மது ஜவதுல்லா, ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்.