நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் காயம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் விளையாடவில்லை.
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர், மார்க் அதிர், சிமி சிங், கர்டிஸ் கேம்பர், கிரேக் யங், ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், ஃபின் ஆலன், வில் யங், டாம் லாதம்(கே), க்ளென் பிலிப்ஸ், ஹென்றி நிக்கோல்ஸ், மாட் ஹென்றி, மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், லாக்கி பெர்குசன்.