அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெல்ஃபெஸ்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து : மார்ட்டின் கப்டில், ஃபின் ஆலன், டேன் கிளீவர், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கே), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில்