வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவன் 97 ரன்களும் சுப்மன் கில் 64 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்தார்கள்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கைல் மேயர்ஸ் 75 ரன்களும் புரூக்ஸ் 46 ரன்களும் பிரண்டன் கிங் 54 ரன்களும் எடுத்தார்கள்.
கடைசிப் பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் சிராஜ் அருமையாக யார்க்கர் வீசி இந்திய அணிக்கு வெற்றியைப் பரிசாக அளித்தார். இந்திய அணியின் தரப்பில் சிராஜ், தாக்குர், சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஷிகர் தவன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.