அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். அதேசமயம் அயர்லாந்து அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் நோக்கிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அயர்லாந்து பிளேயிங் லெவன்: பால் ஸ்டிர்லிங்(கேப்டன்), ராஸ் அதிர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், நீல் ராக், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அதிர், ஃபியோன் ஹேண்ட், மேத்யூ ஹம்ப்ரேஸ், பெஞ்சமின் வைட், கிரஹாம் ஹியூம்
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், பேட்ரிக் க்ரூகர், ஜார்ன் ஃபோர்டுயின், நகாபா பீட்டர், லிசாட் வில்லியம்ஸ், லுங்கி இங்கிடி.