அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் அயர்லாந்து அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில் அயர்லாந்து அணி வெல்லும் பட்சத்தில், டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), ஜார்ஜ் டாக்ரெல், வில்லியம் மெக்ளின்டாக், ஷேன் கெட்கேட், நீல் ராக், சிமி சிங், மார்க் அதிர், பேரி மெக்கர்த்தி, கிரேக் யங்.
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவரே, தடிவனாஷே மருமணி, ரெஜிஸ் சாகப்வா, டியோன் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, லூக் ஜோங்வே, டொனால்ட் டிரிபனோ, வெலிங்டன் மசகட்ஸா, பிளசிங் முசரபாணி, ரிச்சர்ட் ந்கராவா.