பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கராச்சி கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News